/

லிம்கா சாதனையாளர் முதல்வருக்காக சிறப்பு பூஜை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுகவினரும், பல்வேறு அமைப்பினரும் கோயில்கள், சர்ச், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள்

News image
Updated On :3 ஜனவரி 2015, 1:12 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியருகே எல்லைக்கருப்பண்ணசாமி கோயிலில் தமிழக முதல்வருக்காக லிம்கா சாதனையாளர் சிறப்பு பூஜைகள், அன்னதானம் செய்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுகவினரும், பல்வேறு அமைப்பினரும் கோயில்கள், சர்ச், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.  பழனி கலையமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் குமார்.  இவர் இரு கைகளையும் கயிறால் கட்டிக்கொண்டு பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு காலாலேயே காரை ஓட்டி லிம்கா சாதனை படைத்தவர் ஆவார்.  ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி ஶ்ரீரங்கம் முதல் பெங்களூரு வரையும் காலால் காரை ஓட்டி சென்றுள்ளார். 

இந்நிலையில் இவர் சனிக்கிழமை பழனி அருகே  தேக்கன்தோட்டம் எல்லைக்கருப்பண்ணசாமி கோயிலில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்தினார்.  வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்றனர். இதுகுறித்து லிம்கா சாதனையாளர் குமார் கூறுகையில், பழனியில் துவங்கிய இந்த சிறப்பு பூஜை மற்றும் அன்னதானமானது ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கும் வரை தமிழகத்தின் முக்கிய கோயில்களில் வாரா, வாரம்  தொடரும் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.