சுடுகாடு இடித்து தகர்ப்பு: நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
கீழப்பாவூர் அருகே இடையார் தவணை ஊராட்சியில் சுடுகாடு இடித்து தகர்க்கப்பட்டதை கண்டித்து செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை


கீழப்பாவூர் அருகே இடையார் தவணை ஊராட்சியில் சுடுகாடு இடித்து தகர்க்கப்பட்டதை கண்டித்து செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழப்பாவூர் ஒன்றியம், இடையார் தவணை ஊராட்சியில் இ. மீனாட்சிபுரம் கிராமத்தில் நாடார் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2006-07 ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நன்மை கூடம், எரி மேடை ஆகியன கட்டப்பட்டது. அப்பகுதியில் வசித்து வரும் சமுதாய மக்கள் இந்த நன்மை கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த டிச. 16 ஆம் தேதி நன்மை கூடம், எரி மேடை ஆகிய ஜெசிபி இயந்திரம் மூலம் இடித்து தகர்க்கப்பட்டது. இடையார் தவணை ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது உறவினர்களின் தூண்டுதலின்பேரில் நன்மை கூடம், எரிமேடை இடித்து தகர்க்கப்பட்டதாக புகார் தெரிவித்து செவ்வாய்க்கிழமை இ.மீனாட்சிபுரம் கிராம மக்கள் பெண்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
சமுதாய மக்களை புண்படுத்தும் வகையில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஊராட்சித் தலைவரும், அவரது உறவினர்களும் நன்மை கூடத்தை இடித்துள்ளதாக புகார் தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இ. மீனாட்சிபுரத்தில் பொதுநிதியிலிருந்து நன்மை கூடம், எரியூட்டும் மேடை ஆகியன புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றியத் தலைவர் செல்வமோகன்தாஸ் உறுதி அளித்தார். எனினும் அப்பணி தொடங்கவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...