நெல்லையில் திருவள்ளுவர் தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.


திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
திருவள்ளுவர் பிறந்த தினத்தையொட்டி திருநெல்வேலி நகரம் வாகையடி முனையில் உள்ள அவரது சிலைக்கு மத்திய மாவட்ட திமுக சார்பில் அதன் செயலர் மு. அப்துல் வஹாப் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர். மாநகரச் செயலர் ஏ.எல்,எஸ். லட்சுமணன், மாவட்ட அவைத் தலைவர் சுப. சீதாராமன், மாவட்ட துணைச் செயலர்கள் எஸ்.பி. கண்ணன், ஆ.க. மணி, பகுதிச் செயலர்கள் நமச்சிவாயம், பூக்கடை அண்ணாத்துரை, அப்துல்கையூம், மாவட்டப் பொருளாளர் பா. அருண்குமா்ர், மாநகர இளைஞரணி துணைச் செயலர் சங்கர், பாஸ்கர், அய்யாசாமி பாண்டியன், பெப்சி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்சான்றோர் பேரவை சார்பில் தென்மண்டல அமைப்பாளர் அ. வியனரசு, மாநகரத் தலைவர் வழக்குரைஞர் ம.சு. சுதர்சன், மாநகரச் செயலர் ஈ. தமிழீழன், இரா.அ. சுந்தரலிங்கம், சோ. துரை, பி.பி. பாண்டியன், மு. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் தமிழ்நல கழகம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...