ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடிநீர் பிரச்னை: சேரன்மகாதேவி அருகே கிராம மக்கள் திடீர் மறியல்

சேரன்மகாதேவி ஒன்றியம், காருக்குறிச்சி ஊராட்சியில் 3 மற்றும் 9 ஆவது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஊராட்சி

News image
Updated On :19 ஜனவரி 2015, 10:34 am

ஷேக் அப்துல்காதர்

சேரன்மகாதேவி அருகே காருக்குறிச்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி திங்கள்கிழமை கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேரன்மகாதேவி ஒன்றியம், காருக்குறிச்சி ஊராட்சியில் 3 மற்றும் 9 ஆவது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து திங்கள்கிழமை ஊராட்சி உறுப்பினர் ரவி தலைமையில் கிராம மக்கள் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி. விஷ்ணுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். சார் ஆட்சியர் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அதிகாரிக்கு மனுவை பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

எனினும் குடிநீர் பிரசனையை தீர்க்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்த கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் திடீரென சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் காருக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.