பாளை அரசு மருத்துவமனையில் சிறுமி சாவு: டெங்கு பாதிப்பா? அதிகாரிகள் விசாரணை
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் சிவகாசியை சேர்ந்த சிறுமி கா. காளியம்மாள் (8) இறந்தார். இது குறித்து சுகாதாரத்துறை


பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் சிவகாசியை சேர்ந்த சிறுமி கா. காளியம்மாள் (8) இறந்தார். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலர் உயிரிழந்தனர். மேலும் அப்பகுதியில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனிடையே சிவகாசியை சேர்ந்த கூலித் தொழிலாளியான காளிமுத்து என்பவரின் மகள் காளியம்மாள் (8) என்ற சிறுமி காய்ச்சல் பாதிப்பு காரணமாக திங்கள்கிழமை பிற்பகல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரவில் காளியம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். காளியம்மாள் டெங்கு பாதிப்பு காரணமாக இறந்தாரா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ் கூறியதாவது:
காய்ச்சல் பாதித்த சிறுமி காளியம்மாள் சிவகாசியில் தனியார் மருத்துவமனையிலும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் திங்கள்கிழமை பிற்பகலில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவில் இறந்தார்.காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 தினங்களுக்கு பிறகுதான் பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி எடுக்கப்படும். காளியம்மாளுக்கு ரத்த மாதிரி எதுவும் எடு்க்கவில்லை. அச்சிறுமி டெங்கு பாதிப்பால் இறக்க நேரிட்டதாக உறுதிசெய்ய முடியவில்லை.
விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதியில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 2 குழந்தைகள் மட்டுமே காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...