காரையாரில் சிறுத்தைப்புலி அட்டகாசம்: பாளை. யில் பிடிபட்டதா? அச்சத்தில் பொதுமக்கள்


திருநெல்வேலி மாவட்டம், காரையார் கோயில் பகுதியில் சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். காட்டுக்குள் விடப்பட்ட சிறுத்தைப்புலி மீண்டும் அங்கிருந்து வெளியேறியதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தைப்புலி, மான், மிளா போன்ற அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. கடையத்திலிருந்து திருக்குறுங்குடி வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இக்காப்பகத்தில் இருந்து இரை தேடுவதற்காகவும், தண்ணீருக்காகவும் வெளியேறும் சிறுத்தைப்புலி, மான், மிளா போன்ற விலங்கினங்கள் மலையடிவாரக் கிராமங்களில் அவ்வப்போது அட்டகாசம் செய்வதுண்டு.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை அருகே திருமால்நகர் குடியிருப்பு பகுதிக்குள் மூன்றரை வயதுள்ள ஆண் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. வனத்துறை, தீயணைப்பு படையினர், கால்நடை மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்து முண்டன்துறை வனப்பகுதியில் கெளதலை ஆறு என்ற இடத்தில் கொண்டு விட்டனர்.சிறுத்தைப்புலியை பிடிக்கும் முயற்சியில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே சிறுத்தைப்புலி குடியிருப்பு பகுதிக்குள் எப்படி வந்தது எப்படி, சிறுத்தையின் வழித்தடம் குறித்து ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாபநாசம் காரையார் செல்லும் வழியில் பிரதான சாலையில் திங்கள்கிழமை அதிகாலை தொடர்ந்து பல மணி நேரம் சிறுத்தைப்புலி உறுமல் சத்தம் கேட்டதாக அப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.புலிகள் காப்பகத்தில் உள்ள சிறுத்தைப்புலி காரையாரில் அட்டகாசம் செய்ததா அல்லது
பாளையங்கோட்டையில் பிடிப்பட்ட சிறுத்தைப்புலி காட்டுக்குள் இருந்து வெளியேறி காரையார் பகுதியில் உலவுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்து புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆர். காஞ்சனா தெரிவித்ததாவது: புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை போன்ற அரிய வகை விலங்கினங்கள் உள்ளன.
அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் முண்டன்துறை சரகத்தில் 40 சிறுத்தை உள்ளன. காரையார் பகுதியில் நடமாடியதாக சிறுத்தை பாளையங்கோட்டையில் பிடிபட்டது என உறுதியாக தெரியாது. புலிகள் காப்பக பகுதியில் வாழும் சிறுத்தைப்புலி காரையார் பகுதியில் உலவியிருக்கலாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...