திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா தனக்கு மாதம் ரூ. 1 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று இளம்பெண் கைக்குழந்தையுடன் திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.
திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் எம். ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரம், மணல் வாரியைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர் கடந்த ஆண்டு பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஆசிக்மீரா தன்னை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் கூறியிருந்தார்.இதையடுத்து ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா, சரவணன், சந்திரபாபு ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ஆசிக்மீரா உள்பட 4 பேரும் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.இதனை விசாரித்த நீதிபதி பிரகாஷ், ஆசிக்மீராவுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும், மற்ற மனுதாரர்களான மைமூன்சரிபா உள்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்குவதாகவும், மேலும், ஆசிக்மீரா, துர்கேஸ்வரிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு நான் தான் தந்தை என்று இன்று (21-ம் தேதி) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தெரிவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருச்சி குடும்ப நல நீதிமன்றத்துக்கு தனது வழக்குரைஞர் பானுமதியுடன் வந்த துர்கேஸ்வரி, அங்கு நீதிபதி மோகன்தாûஸ சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் ஆசீக்மீராவுக்கு மாத வருமானம் ரூ. 10 லட்சம் என்றும், இதில் அவருக்கு பிறந்த 9 மாதக் குழந்தையான ஹரிஷ்மா ஆசிக்காவுக்கு தாய் துர்கேஸ்வரியை பாதுகாவலராக நியமித்து மாதந்தோறும் ரூ. 1 லட்சம் ஜீவானாம்சம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.