நாளை வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல்விடுப்பு போராட்டம்
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்துறை ஊழியர்களும் நாளை(ஜன.22) ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புதல், மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்கள, படிகளை தமிழக அரசு வழங்குல், அகவிலைப்படியில் 50சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திடல், பழைய ஓய்வூதியத்திட்டத்தையே தொடருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டது. மேலும் மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தில் தாய், தந்தையரை இணைத்தல், தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கல், கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற்றவர்களுக்கான வரன்முறை ஆணை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(ஜன.22) ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், 9 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், ஆகியவற்றி பணிபுரியும் அனைத்து வருவாய்துறை ஊழியர்களும் முழுமையாக பங்கேற்றுள்ளனர். ஆகவே, தமிழக அறசு உடனடியாக போராடிக்கொண்டிருக்கும் அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மாற்றம் இல்லாத பட்சத்தில் அனைத்துத்துறை சங்கங்களையும் அழைத்து தொடர்வேலை நிறுத்தம் மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...