ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் பூக்களின் விலை திடீர் உயர்வு: மல்லிகை, பிச்சிப் பூ கிலோ ரூ. 1,500

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மதுரை, அருப்புக்கோட்டை, நிலக்கோட்டை ஆகிய இடங்களில் மல்லிகை, பிச்சிப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு

News image
Updated On :22 ஜனவரி 2015, 1:43 pm

ஷேக் அப்துல்காதர்

வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் திருநெல்வேலி பூ சந்தையில் பூக்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. மல்லிகை, பிச்சிப்பூ கிலோ ரூ. 1,500 விற்பனை செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மதுரை, அருப்புக்கோட்டை, நிலக்கோட்டை ஆகிய இடங்களில் மல்லிகை, பிச்சிப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.வடகிழக்குப் பருவ மழை முடிந்து தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. வழக்கமாக கிலோ ரூ. 500 முதல் ரூ. 700 வரை மல்லிகை, பிச்சிப் பூக்கள் விற்பனை செய்யப்படும். பனிப்பொழிவால் வரத்து குறைந்த காரணத்தாலும், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகரிப்பதாலும் விலை உயருவதுண்டு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை, பிச்சிப் பூக்கள் கிலோ ரூ. 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பண்டிகை முடிந்த நிலையில் இப்பூக்கள் கிலோ ரூ. 500 முதல் ரூ. 700 வரை விற்பனை ஆகின.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து மல்லிகை, பிச்சிப் பூக்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை திருநெல்வேலி பூ சந்தையில் மல்லிகை, பிச்சிப் பூ ஆகியன கிலோ ரூ. 1,500 க்கும், கலர்  பிச்சிப் பூ கிலோ ரூ. 1,200 க்கும் விற்பனை ஆனது.

திடீரென பூக்களின் விலை உயர்ந்துள்ளது குறித்து வியாபாரி குத்தாலிங்கம் கூறியதாவது: பனிப்பொழிவு குறைந்து தொடர்ந்து வெப்பம் நிலவி பூக்களின் உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே இப்பூக்களின் விலை குறைய வாயப்புள்ளது. முழுமையாக பனிப்பொழிவு குறைந்து பூக்கள் வரத்து அதிகரிக்க இன்னும் ஒரு மாதம் வரை ஆகலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.