ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடிநீர் பிரச்னை: காருக்குறிச்சியில்கிராம மக்கள் முற்றுகை

சேரன்மகாதேவி அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை புதன்கிழமை இரவு கிராம மக்கள் இரு பிரிவினர்  முற்றுகையிட்டனர். 3 மணி நேரம் நீடித்த போராட்டத்தால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

News image
Updated On :22 ஜனவரி 2015, 4:13 am

ஷேக் அப்துல்காதர்

சேரன்மகாதேவி அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை புதன்கிழமை இரவு கிராம மக்கள் இரு பிரிவினர்  முற்றுகையிட்டனர். 3 மணி நேரம் நீடித்த போராட்டத்தால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

காருக்குறிச்சி ஊராட்சியில் 3 மற்றும் 9 ஆவது வார்டு பகுதியில் 6 தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமிரவருணி ஆற்றில் உதயமார்த்தாண்டபுரத்தில் இருந்து காருக்குறிச்சி பிரதான சாலையில் உள்ள குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதில் சிக்கல் நீடித்த காரணத்தால் அப்பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.
காருக்குறிச்சி பிரதான சாலையில் வசிக்கும் வேறு சமுதாயத்தை சேர்ந்த 13 வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதால் மேற்கண்ட 6 தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை இருப்பதை தீர்க்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேற்கண்ட 13 குடிநீர் இணைப்பை துண்டித்து வேறு குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
இப்பணியில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பிரான்சிஸ் உள்ளிட்ட ஒன்றிய அதிகாரிகள் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
முறைகேடாக குடிநீர் எடுக்கும் 13 இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என கிராம மக்களும் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் முற்றுகையில் ஈடுபட்டதால் அதிகாரிகள் திணறினர்.
சேரன்மகாதேவி டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்த சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி. விஷ்ணு, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.