கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 18 பேர் கைது

திருநெல்வேலி சந்திப்பில் போலீஸாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 18 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :22 ஜனவரி 2015, 8:44 am

முத்துகுமார்

திருநெல்வேலி சந்திப்பில் போலீஸாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 18 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த உண்மை ஆவணங்களை வெளியிடக்கோரியும், நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணி ஆகியவை சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.கே.டி.கண்மணிமாவீரன், தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு ஆகியோர் தலைமையில் பலர் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை திரண்டனர்.

பின்னர் கோரிக்கைகளை விளக்கி முழக்கமிடத்தொடங்கினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதிராஜா தலைமையிலான போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணிச் செயலர் எ.கே.நெல்சன், மாநகர மாவட்ட மாணவரணிச் செயலர் ஏ.முத்துப்பாண்டி உள்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.