கரூரில் கந்துவட்டிக்கொடுமையால் சகோதரர்கள் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதையடுத்து கந்துவட்டிக்காரர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர்கள் மனோகரன், அண்ணாதுரை. சகோதரர்களான இவர்கள் வீட்டு செலவுக்காக திருமாநிலையூரைச் சேர்ந்த குபேரன் என்பவரிடம் வடிக்கு பணம் வாங்கியுள்ளனர். இதனிடையே வாங்கிய பணத்திற்கு அதிக வட்டி போட்டு சகோதரர்களை மிரட்டியதுடன், அவர்கள் தங்கியிருந்த வீட்டையும் எழுதி வாங்கிக்கொண்டதால் விரக்தியில் கடந்த மாதம் 17-ம்தேதி சகோதரர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக குபேரன் உள்ளிட்ட மூன்று பேர் மீது பசுபதிபாளையம் போலீஸôர் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதையடுத்து கந்துவட்டிக்கொடுமையால் சகோதரர்கள் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரர் குபேரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஷிநிர்மல்குமாரின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி குபேரை குண்டர்சட்டத்தில் அடைக்குமாறு கடந்த 25-ம்தேதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குபேரன் 26-ம்தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

