அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. சிவபக்தராக இருந்து வாழ்ந்த காலம், பரமதத்தரை மணம் முடித்தது, இரண்டாவது திருமணம் செய்துகொண்டு கணவரே தம் பாதத்தில் வீழ்ந்து வணங்கியதை ஏற்கமுடியாமல், பேய் உருவம் வேண்டிப் பெற்று இறைவன் வீற்றிருக்கும் கயிலாயத்தை காலால் நடந்து செல்வது ஆகாதென்று தலைக்கீழாக கைகளை ஊன்றி சிவபெருமானை கண்டார் புனிதவதியார். இவரின் பக்தியை மெச்சும் வகையில் தாய், தந்தையரற்ற இறைவன் (சிவபெருமான்) அம்மையே என்றழைத்தார். இவ்வாறு பெருமைகொண்ட அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.