அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மடிக்கணினிகள் பெற மாணவ, மாணவிகள் கட்டாயம் ஆதார் எண்களை அளிக்க வேண்டும்

விலையில்லா மடிக்கணினிகள் பெறும்  மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் தங்களின் ஆதார் அடையாள அட்டைகளை அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.  

Updated On :3 ஜூலை 2015, 1:21 pm

விலையில்லா மடிக்கணினிகள் பெறும்  மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் தங்களின் ஆதார் அடையாள அட்டைகளை அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.  

அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ்2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினிகள் ஆண்டுதோறும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விவரங்கள் மட்டுமே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.

ஆனால், நிகழாண்டு முதல் ஆதார் அடையாள அட்டை எண்ணையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதை ஒவ்வொருவரும் பிளஸ்2 மதிப்பெண் அசல் சான்றிதழ்களை பெற பள்ளிக்கு வரும் போது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தவறாமல் அளிக்க வேண்டும். அதை ஒவ்வொரு பள்ளியிலும் மடிக்கணினி பெறுகின்றவர்களின் முழு விவவரங்களுடன், மத்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை எண்ணையும் கூடுதலாக சேர்த்து கணிப்பொறியில் பதிவு செய்து ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கவும்  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதனால் இதுவரையில் ஆதார் அடையாள அட்டை பெறாத மாணவ, மாணவிகள் அருகில் உள்ள வட்டார மையங்கள் மற்றும் இ.சேவை மையங்களை அணுகி ஆதார் அடையாள அட்டை எண்களை மாணவ, மாணவிகள் பெற்று பள்ளிகளில் நேரில் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.