அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே பைக் விபத்தில்  இளைஞர் சாவு

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி 4 வழிச்சாலையில் தடுப்புச் சுவர் மீது மோதிய விபத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On :3 ஜூலை 2015, 2:29 pm

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி 4 வழிச்சாலையில் தடுப்புச் சுவர் மீது மோதிய விபத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    விருதுநகர் அருகே துலுக்கப்பட்டியைச் சேர்ந்த கொம்புசாமியின் மகன் அருண்குமார்(32). இவர் விருதுநகரில் இருந்து துலுக்கப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில்  4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம. அப்போது, எட்டுநாயக்கன்பட்டி விலக்கருகே செல்லும் போது இருச்சகர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இது குறித்த அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.