விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி 4 வழிச்சாலையில் தடுப்புச் சுவர் மீது மோதிய விபத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே துலுக்கப்பட்டியைச் சேர்ந்த கொம்புசாமியின் மகன் அருண்குமார்(32). இவர் விருதுநகரில் இருந்து துலுக்கப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம. அப்போது, எட்டுநாயக்கன்பட்டி விலக்கருகே செல்லும் போது இருச்சகர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

