தொழிற்கல்வி மற்றும் பட்டப்படிப்பு பயின்று வரும் முன்னாள் படைவீரர்கள், அவில்தார் பதவியில் உள்ளவர்களின் வாரிசுகளிடம் இருந்து கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுதில்லி பாதுகாப்பு அமைச்சகத்தின் விருப்புரிமை நிதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அவில்தார் மற்றும் முன்னாள் படைவீரர்களின் தொழிற்கல்வி மற்றும் பட்டப்படிப்பு படித்து வரும் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை இரண்டு பேருக்கு வழங்கப்படுகறது. இதில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் ரூ.500, 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் ரூ.800, 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் ரூ.1000, 11 முதல் 12-வது வகுப்பு வரையில் ரூ.1500ம் ஒவ்வொரு ஆண்டும் புத்தக படியாக வழங்கப்படுகிறது.
அதேபோல், பாலிடெக்னிக், தொழிற்கல்வி, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்விக்கு ரூ.10 ஆயிரம், பாலிடெக்னிக் கல்விவிக்கு ரூ.7500, பட்டப்படிப்புக்கு ரூ.2 ஆயிரமும், பட்ட மேற்படிப்புக்கு ரூ.2500, விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரம் என ஆண்டுதோறும் வழங்கப்பட இருக்கிறது. எனவே நிகழாண்டுக்கான கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பம் விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. அதை பூர்த்தி செய்து வருகிற நவ.15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

