அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சாத்தூர் அருகே ஆட்டோவில் கடத்திய 150 கிலோ சல்பர் மருந்து பறிமுதல்

சாத்தூர் அருகே அனுமதியின்றி ஆட்டோவில் கடத்திச் சென்ற பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான 150 கிலோ சல்பர் மருந்தை சனிக்கிழமை இரவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On :11 ஜூலை 2015, 5:01 pm

சாத்தூர் அருகே அனுமதியின்றி ஆட்டோவில் கடத்திச் சென்ற பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான 150 கிலோ சல்பர் மருந்தை சனிக்கிழமை இரவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் மாலை நேரங்களில் ரேசன் அரிசி வாகனங்களில் கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்ததாம்.

அதன் அடிப்படையில் சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேனி தலைமையில் அதிகாரிகள் சாத்தூர்-வெம்பக்கோட்டை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதன் உள்ளே பட்டாசுகள் தயார் செய்ய பயன்படும் மூலப்பொருளான சல்பர் மருந்து 3 சாக்கு பைகளில் இருந்தது ஆய்வில் தெரியவந்தது.

மேலும், அவர்கள் குறித்து விசாரணை செய்ததில் சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ்(52), குமார்(32) என்பது தெரியவந்தது.
உடனே சல்பர் மருந்தையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து அதிகாரிகள்  வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து கனகராஜ் மற்றும் குமார் ஆகியோரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.