விருதுநகரில் பயங்கர ஆயுதங்களுடன் பழைய காரில் வந்த 3 இளைஞர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே கேட் பகுதியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தெய்வீகபாண்டியன் தலைமையில் சனிக்கிழமை அதிகாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பதிவு எண் இல்லாத பழைய கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, போலீஸார் நிற்பதை பார்த்ததும் குறுக்குச் சாலையில் வேகமாக செல்வதற்காக காரை திருப்பியுள்ளனர்.
உடனே சுற்றி வளைத்து நிறுத்தி வாகனத்திற்குள் போலீஸார் சோதனை செய்தனர். காருக்குள் அரிவாள், பட்டாக்கத்தி, கைப்பிடி கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரித்ததில் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த திவாகர்(21), மணிவண்ணன்(18), காசிசெல்வம்(23) என்பதும் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும், விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரனான தகவலையும் தெரிவித்துள்ளனர். இதனால் கிழக்கு காவல் நிலைய போலீஸார் சந்தேகம் அடைந்த நிலையில் 3 பேரையும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் அதிகாலையில் பதிவு எண் இல்லாத காரில் சென்றது தொடர்பாக இளைஞர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

