மத்திய அரசால் நடப்பு மக்களவை கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து புதன்கிழமை மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் திட்ட அமைப்பு செயலாளர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார். இதில், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் முருகன், பொறியாளர் சங்கத்தின் எஸ்.ராமன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
அதைத் தொடர்ந்து நடப்பு கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதா-2014 எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இறுதியாக அம்பேத்கார் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கத்தின் நிர்வாகி வீரையா நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் ஐக்கிய சங்கம், காங்கிரஸ் மின் ஊழியர் சங்கம், ஜனதா தொழிலாளர் சங்கம், அம்பேத்கார் ஊழியர்கள் சங்கம், அம்பேத்கார் பொறியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

