அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே போலி ஆவணம் தயார் செய்து 21 ஏக்கர் நிலம் மோசடி : ஊராட்சி தலைவர் உள்பட 13 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே போலி ஆவணம் தயாரித்து 21 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ஊராட்சி தலைவர் உள்பட 13 பேர் மீது நிலத்தடுப்பு பரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On :26 ஜூலை 2015, 2:11 pm

விருதுநகர் அருகே போலி ஆவணம் தயாரித்து 21 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ஊராட்சி தலைவர் உள்பட 13 பேர் மீது நிலத்தடுப்பு பரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்தவர் சீனிவாசனின் மகள்கள்,  லதா(40), கலா(45). இவரது தந்தை சீனிவாசனுக்கு சொந்தமாக எ.புதுப்பட்டி கிராமத்தில் 21 ஏக்கர் விளைநிலம் உள்ளது. இதில், சீனிவாசன் 1999 இறந்து விடுகிறார். அப்போது, தங்களுக்கு உரிய விளைநிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கடந்த 3 நாள்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலரை சந்தித்துள்ளனர். அப்போது, அந்த விளைநிலம் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் பார்த்ததில் தனது தந்தையார் பெயரில் இருப்பதும், மோசடியாக விற்பனை செய்யப்பட்டிருப்பதும்  தெரியவந்தது.

மேலும், இது தொடர்பாக விசாரணை செய்ததில் விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சி தலைவர் சேதுராமன்(57). இவர் சாத்தூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேற்குறிப்பிட்ட கிராமத்தில் நிலம் இருப்பதை அறிந்து, அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் திருவேங்கடசாமி உதவியுடன் ஆள்மாறாட்டம் செய்து போலி பட்டா தயார் செய்துள்ளனர். அதையடுத்து, திருவேங்கடசாமி இடம் இருந்து சேதுராமன் கிரையம் பெற்று, அதை 11 பேருக்கு விற்பனை செய்துள்ள விவரமும் தெரியவந்தது.

உடனே இது குறித்து விருதுநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸாரிடம் லதா புகார் செய்தார். அதன் அடிப்படையில் ஊராட்சி தலைவர் சேதுராமன், திருவேங்கடசாமி உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.