தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஊதிய ஒப்பந்த விவகாரம்: தொழிற்சங்கங்களை அழைத்து பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் 

நெய்வேலி என்.எல்.சி நிரந்தர பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஹெச்.எம்.எஸ். சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2015, 2:41 am

சீனிவாசன்

நெய்வேலி என்.எல்.சி நிரந்தர பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஹெச்.எம்.எஸ். சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், தேமுசா மற்றும் சி.ஐ.டியூ. பி.டி.எஸ். ஐ.என்.டி.இ.சி., டி.எம்.எஸ். ஹெ.எம்.எஸ். டி.வி.எஸ் எல்.எல்.எஸ். உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுச பொதுச் செயலாளர் ராஜ வன்னியன் கூறும் போது.. 1.10.2012 முதல் ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டும்.

கடந்த 40 மாதங்களாக என்.எல்.சி. நிர்வாகம் இந்த ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தரும் வகையில் 3 வது முறையாக அனைத்து தொழிற்சங்கத்தினரிடமும் கலந்து பேசி ஆலோசனை நடத்தினோம்.

மீண்டும் வரும் வெள்ளிக் கிழமை அன்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து பேச உள்ளோம். அதற்குள் என்.எல்.சி நிர்வாகம் தொழிற்சங்கங்களை அழைத்து பேசி சுமூகம் முடிவு எடுக்க வேண்டும்  இல்லை என்றால் என்.எல்.சி நிர்வாகம் ஸ்தமிப்பிக்கும் வகையில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.