நெய்வேலியில் அண்ணன் இறந்த ஏக்கம், விஷம் குடித்த தங்கை சாவு
அண்ணன் இறந்த சோகம் தாங்காமல் பூச்சி மருத்துவ குடித்த தங்கை புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை இறந்தார்.


அண்ணன் இறந்த சோகம் தாங்காமல் பூச்சி மருத்துவ குடித்த தங்கை புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை இறந்தார்.
பண்ருட்டி அடுத்துள்ள கீழ்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கும் புதுச்சேரி மாநிலம், தவளக்குப்பம், பூராணங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகள் சரண்யாவிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சரண்யாவின் அண்ணன் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் இறந்துள்ளார். இந்த துக்கத்தை தாங்க முடியாத சரண்யா சனிக்கிழமை பூச்சி மருந்தை குடித்தார்.
புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார். நெல்லிக்குப்பம் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...