படிப்பை தொடரமுடியாத விரக்தியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்றும் 11 -ம் வகுப்பில் சேர்ந்து கல்விகற்க பணவசதி இல்லாத சூழ்நிலையில் எடை மிஷின்( வே


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்றும் 11 -ம் வகுப்பில் சேர்ந்து கல்விகற்க பணவசதி இல்லாத சூழ்நிலையில் எடை மிஷின்( வே பிரிட்ஷ்) நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மாணவன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.
விராலிமலை சக்தி நகரைச் சேர்ந்த பிச்சை மகன் தியாகு(17) இவர் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதிவிட்டு கடந்த இரண்டு மாதமாக விராலிமலையில் உள்ள எடை மிஷின்( வே பிரிட்ஷ்) நிறுவனத்தில் வேலை பார்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதில் தியாகு தேர்ச்சி பெற்று மகிழ்ச்சியில் இருந்து வந்த நிலையில், அதனைத் தொடர்ந்து 11 -ம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயில விரும்புவதாக தனது தாய் இந்திராணியிடம் கூறியுள்ளார், ஆனால் வறுமையின் காரணமாக படிப்பு வேண்டாம் என்றும், தொடர்ந்து எடை மிஷின் நிறுவனத்திலேயே வேலை பார்க்க தியாகுவின் தாய் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்த தியாகு தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் உள்ள ஓரு அறையில் செவ்வாய்க்கிழமை மதியம் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.
தகவலறிந்து வந்த விராலிமலை காவல் துறையினர் தியாகுவின் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...