அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் முன்னிலை வகித்துப் பேசினர். மலேசியா உலகத் தமிழாராய்ச்சி தலைவர் டான்ஶ்ரீ த.மாரிமுத்து விழா பேரூரையாற்றினார். மலாயாப் பல்கலைக்கழகம் இந்திய ஆய்வியல்துறை தலைவர் ஆர்.மோகன்தாஸ், மலேசியா டத்தோ ஹாஜி தஸ்லீம், சென்னை பல்கலைக்கழக தமிழ இணைப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் அரங்க.ராமலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றினர். உதவிப் பேராசிரியர் ப.சு.மூவேந்தன் நன்றி கூறினார். விழாவில் கலைஞன் பதிப்பகம் நந்தன் மாசிலாமணி, பதிவாளர் ஜெ.வசந்தகுமார், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் ராம.சந்திரசேகரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆ.ரகுபதி, சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, குடியரசுத்தலைவரின் தொல்காப்பியர் விருது பெற்ற பேராசிரியர் சை.வே.சண்முகம், பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன், பேராசிரியர் ஆறுமுகனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.