ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விருதுநகர் அருகே வீட்டுக் கதவை உடைத்து ரொக்கம் வெள்ளிப்பொருள்கள் திருட்டு

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டுக் கதவையின் பூட்டை  உடைத்து வெள்ளிப்பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரத்தையும் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து

News image
Updated On :7 ஜூன் 2015, 10:59 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டுக் கதவையின் பூட்டை  உடைத்து வெள்ளிப்பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரத்தையும் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே பெரியகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்(33). இவர் சனிக்கிழமை காலையில் குடும்பத்தோடு உறவினர் வீட்டுக்கு சென்றார்களாம். அதையடுத்து, இரவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்க்கையில் வீட்டில் வைத்திருந்த வெள்ளிக் குத்துவிளக்குகள் மற்றும் பீரோவை உடைத்து சில்லரைகளாக மாற்றி வைத்திருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடபாக கணேஷ்குமார் விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தி்ல் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக் கதவை உடைத்து வெள்ளிப்பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.