ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விருதுநகர் அருகே கல்குவாரியை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் சேதமடைந்து வருவதாக கூறி உடனே அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை

News image
Updated On :8 ஜூன் 2015, 1:10 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் சேதமடைந்து வருவதாக கூறி உடனே அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமனிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் அருகே உள்ளது எல்கைபட்டி கிராமம். இக்கிராமத்தின் தெற்கு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இரவும், பகலும் கல்குவாரிக்கு வெடி வைப்பதால் ஏற்படும் சத்தத்தால் வீடுகள் அதிர்வதால் தூங்க முடியாத நிலையுள்ளது.   இதுபோன்ற காரணங்களால் வேளாண்மை நிலங்களில் வேலை செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதனால், இக் கல்குவாரியை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறிப்பிட்ட கிராமத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.