சேலம் தனியார் உணவகத்தில் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து: 7 பேர் காயம்
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் திடீரென எரிவாயு உருளை வெடித்ததில் உணவக ஊழியர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.


சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் திடீரென எரிவாயு உருளை வெடித்ததில் உணவக ஊழியர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.ஏ. சாலை சாந்தி தியேட்டர் எதிரில் மங்கள விலாஸ் என்ற தனியார் உணவகம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை மதியம் சமையல் செய்யும் பணி நடத்து கொண்டிருந்தபோது எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதை சரிசெய்ய முடியாததால் ஊழியர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதைத்தொடர்ந்து எரிவாயு உருளை திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அருகில் உள்ளோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்தினால் பரவிய தீயின் காரணமாக கடையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்டவை எரிந்தன. இதில் ஏற்பட்ட புகையின் காரணமாக அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்ததுடன், அங்கு முழுமையாக இருந்த இரண்டு எரிவாயு உருளைகளை அப்புறப்படுத்தினர்.
தீவிபத்து குறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புநிலைய அதிகாரி சிவகுமார் கூறுகையில், உணவகத்தில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீயை சுமார் 1 மணிநேரம் போராடி அணைத்தோம். இந்த விபத்தில் உணவகத்தில் இருந்த பாத்திரங்கள், கண்ணாடி பொருள்கள், மேஜைகள் உடைந்து சிதறின எனக் கூறினார்.
இந்த தீவிபத்தில் காயமடைந்த உணவக ஊழியர்கள் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வரதராஜ் (32), அம்மாபேட்டையைச் சேர்ந்த பால் (27), சீல்நாயக்கன்பட்டி பெருமாள் (28) ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உணவகத்துக்கு வெளியில் நின்ற 4 பேர் லேசான காயத்துடன் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து சேலம் டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிóத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...