விஜயகாந்துடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்தை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்தை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
தமிழர் நலன் காக்க, உரிமைகளை மீட்டெடுக்க ஒருமித்த கருத்துகளை உருவாக்க கடந்த 2 மாத காலமாக பல அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்து வருகிறேன். அந்த அடிப்படையில் விஜயகாந்தைச் சந்தித்தேன்.
வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய தமிழகம் கட்சியின் 6வது மாநில மாநாடு நடக்க இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்தைக் கலந்து கொள்ளும்படி அழைத்தேன். அது குறித்து பின்னர் தெரிவிப்பதாகக் கூறினார்.
ஈழத்தமிழர் பிரச்னை, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகிறது. இவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் கட்சிகளுக்கு இடையேயான இறுக்கங்கள் குறையும்.
முதல் முறை அனைவரையும் சந்தித்து விட்டேன். தேவைப்பட்டால் மீண்டும் அனைவரையும் சந்திப்பேன்.தேர்தல் கூட்டணி தொடர்பாக யாரிடமும் பேசவில்லை. முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கவும் நேரம் கேட்பேன். நேரம் ஒதுக்கினால் சந்தித்து பேசுவேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...