ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விருதுநகர் அருகே கேப் வெடி ஆலை விபத்தில் தொழிலாளி காயம்

விருதுநகர் அருகே கேப்வெடி ஆலையில் இயந்திரத்தில் வேலை செய்யும் போது உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி காயம் அடைந்தார்.

News image
Updated On :13 ஜூன் 2015, 10:25 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கேப்வெடி ஆலையில் இயந்திரத்தில் வேலை செய்யும் போது உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி காயம் அடைந்தார்.

விருதுநகர் அருகே முதலிபட்டி அருகே தனியார் கேப் வெடி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை சிவகாசி அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த தேசிங்குராஜா(35) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 10 அறைகளில் சனிக்கிழமை தொழிலாளர்கள் கேப் வெடிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அதில், விருதுநகர் அருகே பட்டாம்புதூரைச் சேர்ந்த முனியசாமியின் மகன் செல்வராஜ்(35) என்பவர் கேப்வெடி தயார் செய்து இயந்திரம் மூலம் துண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, கேப்வெடியில் உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், அப்பணியில் ஈடுபட்டிருந்த செல்வராஜுக்கு காயம் ஏற்பட்டது.

அதையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வச்சக்காரபட்டி போலீஸார் உரிமையாளர் தேசிங்குராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.