மக்கள் பிரச்சனைகளை தீர்க்காவிடில் தேமுதிக போராடும்: விஜயகாந்த்
மக்கள் பிரச்சனைகளை தீர்க்காவிடில் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை காவேரிப்பாக்கம் அடுத்தகளத்தூரில் தெரிவித்தார்.


மக்கள் பிரச்சனைகளை தீர்க்காவிடில் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை காவேரிப்பாக்கம் அடுத்தகளத்தூரில் தெரிவித்தார்.
காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர்,சங்கரம்பாடி பாலாற்றுப்படுகையில் அரசு மணல் குவாரி அமைக்க கடந்த ஒராண்டுக்கு முன் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு ஒருதரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகினறனர்.இருதரப்பினருக்கும் இடையே கடந்த 3ந்தேதி பிரச்சனைஏற்பட்டது.இதில் எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினரை சேர்ந்த 20பேரை போலீஸôர் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க கோரி களத்தூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வியாழன்கிழமை இரவு 9மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகலறிந்க வேலூர் டிஎஸ்பி பன்னீர்செல்வம், வருவாயத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடாததால் அவர்களை 2 வேன்களில் ஏற்றி களத்தூர் கிராமத்துக்கு அழைத்து சென்றனர்.களத்தூர் பகுதியில் உள்ளபஜனை கோயில் அருகே வேன் நின்றது.
பாதுகாப்புக்காக காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் காவலர்கள் வெங்கடேசன், மூர்த்தி ஆகியோர் ஜீப்பில் சென்றனர். அப்போது போலீஸ் வேனில் இருந்து இறங்கியபெண்கள் ஏற்கனவே அங்கிருந்த பொதுமக்கள் ஜீப்பை மடக்கி ஓட்டுநர் வெங்கடேசன் காவல் ஆய்வாளர் காண்டீபன் காவலர் மூர்த்தி ஆகியோரை கை, காம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடேசன்அளித்த புகாரின்பேரில் அவளூர் போலீஸார் வழக்கு பதிந்து களத்தூர் கிராமத்கை சேர்ந்த அன்பழகன், பட்டாபி, சுந்தர் உள்ளிட்ட 13பேரை கைது செய்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை களத்தூர் கிராமத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொது மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது:
மணல் குவாரிஅமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள் மீது பொய்வழக்கு போட்டு 35க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தேமுதிக தொடர்ந்து போராடும். மக்களுக்காத்தான் அரசு என்பதை அரசு உணரவேண்டும். காவல்துறையினருக்கு கண்டிக்க உரிமை உள்ளது ஆனால் எல்லை மீறக்கூடாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இந்தபகுதியில் மணல் குவாரி அமைக்க கூடாது. கேரளா,ஆந்திரா பகுதிகளில் மணல் எடுக்க தடைசெய்யப்பட்டுள்ளது. பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் விரைவில் என்னுடைய தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்றார். விஜயகாந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...