ராஜபாளையம் அருகே ரயில்வே நீரேற்று நிலையத்தில் விலையுயர்ந்த குழாய்களை திருடியது தொடர்பாக பணியாளர்கள் உள்பட 5 பேரை ரயில் பாதுகாப்பு படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் பழைய ரயில் நிலையம் உள்ளது. தற்போது, இந்நிலையம் பயன்பாட்டில் இல்லை. அந்த நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் ரயில்வே நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் புகைவண்டி இயந்திரத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த வகை இயந்திரம் பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் தற்போது பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. ரயில் நிலையங்களில் ராஜபாளையத்தைச் சேர்ந்த குருசாமிராஜா மரங்களை ஒப்பந்தம் பெற்று வேலை செய்து வந்தாராம்.
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி நள்ளிரவில் விருதுநகர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மோகன்தாஸ் தலைமையில் ரயில்வே நிலையங்களில் ரோந்து சென்றனர். அப்போது, சோழபுரம் ரயில் நிலையத்திற்குள் இருந்து ஒரு லாரியும், ஜே.சி.பி வாகனமும் வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது லாரியில் நீரேற்று நிலையத்தில் பதிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த குழாய்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் சுப்பையன், ஜே.சி.பி.முத்துகோனப்பன், ஓப்பந்தகாரர் குருசாமிராஜா ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில், ரயில்வே அலுவலர் கண்ணன் உடைந்தையுடன், பணியாளர் வெள்ளைத்துரை, ரயில்வே பட்டறை தொழிலாளி எம்.சுப்பையா ஆகியோர் மேற்பார்வையில் நீரேற்று நிலையத்தில் ஜே.சி.பி வாகன உதவியுடன் 300 மீட்டர் குழாய்களை எடுத்து லாரியில் திருட்டுத் தனமாக எடுத்து சென்றுள்ளனர். அதை ராஜபாளையம் பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான இரும்பு கடையில் ரூ.1.70 லட்சத்திற்கு விற்றுள்ளனர். அந்த பணத்தை ரயில் பணியாளர்களான கண்ணன், வெள்ளைத்துரை, பட்டறை தொழிலாளி எம்.சுப்பையா, ஒப்பந்தகாரர் குருசாமிராஜா ஆகியோர் பங்கு பிரித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில்வே அலுவலர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், குருசாமிராஜா, லாரி டிரைவர் சுப்பையா, ஜே.சி.பி.ஓட்டுநர் முத்துக்கோனப்பன், இரும்புக் கடை பாலசுப்பிரமணியம், ரயில்வே பட்டறை பணியாளர் எம்.சுப்பையா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

