/

சிறுமிகள் பாலியல் வழக்கு: எஸ்.ஐ. உள்பட 2 பேருக்கு ஜாமீன்

புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஐ. உள்ளிட்ட 2 பேருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

News image
Updated On :19 ஜூன் 2015, 8:03 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஐ. உள்ளிட்ட 2 பேருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பலாத்காரம் செய்தது தொடர்பாக 9 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் யுவராஜ், காவலர்கள் செல்வகுமார், சங்கர், ஏட்டு பண்டரிநாதன் உள்ளிட்ட 5 பேர் சரண் அடைந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சரண் அடைந்த 5 பேரும் ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் டிஸ்மி்ஸ் செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் யுவராஜ், காவலர் சங்கர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி எஸ்.ஐ. பாலகிருஷ்ணன, தலைமைக் காவலர் செல்வகுமார் ஆகியோர் மனு செய்திருந்தனர். அதன் மீதான விசாரணை தலைமை நீதிபதி சிவி.கார்த்திகேயன் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் இருவரும் ஜாமீ்ன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறுமிகள் பாலியல் வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமைக் காவலர் பண்டரிநாதனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் 4 போலீஸார் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய 8 போலீஸாரும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.