பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக காவல் துறை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியோருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் நடந்த முகாமிற்கு ஜான் தேவாரம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.அணில்குமார் முன்னிலை வகித்தார். இதில், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்தல் தொடர்பான சட்டங்கள், பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகளிடம் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் எப்படி நடந்து கொள்வது தொடர்பாக உதவி காவல் கண்காணிப்பாளர் மாடசாமி விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதேபோல், பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் குழந்தைகளிடம் பாரமுகம் காட்டக் கூடாது. எக்காரணம் கொண்டும் மனநோகும் படி திட்டவும் கூடாது. மேலும், மனரீதியாக உளைச்சல், பாலியல் தொல்லை கொடுப்பது குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படும்.
சிறுமி திருமணம் தொடர்பான தகவல் பெரும்பாலும் சக மாணவிகளிடம் இருந்து கிடைக்கிறது. பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தாலும், அதை மறைக்கவே விரும்புகின்றனர். நிகழாண்டில் இதுவரையில் 45 சிறுமி திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சைல்டு லைன் அமைப்பின் திட்ட இயக்குநர் டாக்டர்.ஜான்தேவாரம் விளக்கமாக எடு்த்துரைத்தார்.
இப்பயிற்சி முகாமில் காவல் துறை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் அமைப்பினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

