தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள விரும்புகிற இளைஞர்களுக்கு 21 நாள்கள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: அடுக்குமாடி, வியாபார தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் பாதுகாப்பு பணிக்கு முறையான பயிற்சி பெற்றவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு தமிம்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து இலவசமாக பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்ட தலைநகரங்களில் உள்ள காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 29ம் தொடங்கி, தொடர்ந்து 21 நாள்கள் வரையில் பயிற்சி நடத்தப்பட இருக்கிறது. இப்பயிற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 பேருக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றராகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 18 வயது முதல் 45 வயதிற்குள்ளும் இருப்பது அவசியம் ஆகும்.
இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் பாதுகாப்பு பணி மேற்கொள்வது தொடர்பாக விளக்கமாக பயிற்சி அளிக்கப்படும். மேலும், இடைவேளை நேரத்தில் தேனீரும், மதிய உணவும் விலையில்லாமல் வழங்கப்படும். இதில், பயிற்சியின் இறுதியில் பாதுகாப்பு பணிக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழும் அளிக்கப்படும். இதில், சேர ஆர்வமுள்ளோர் தங்களது கல்விச் சான்று, ஜாதி, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை மற்றும் புகைப்படம் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 22,23 ஆகிய நாள்களில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. எனவே தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு பிரிவு ஒன்றும் 50 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து நிறைவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

