மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றவர் மரத்தில் மோதி சாவு

விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை உறவினர் இறந்த துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி வாகனம் மரத்தில் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

News image
Updated On :26 ஜூன் 2015, 1:58 pm

சி. உதயகுமார்

விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை உறவினர் இறந்த துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி வாகனம் மரத்தில் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள ஆத்துப்பட்டியைச் சேர்ந்த மூக்கன் மகன் பழனிச்சாமி(25) இவர் வெள்ளிக்கிழமை திருநல்லூரில் உள்ள தனது உறவினர் இறந்த துக்கம் விசாரிக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

விராலிமலை கீரனூர் சாலை குளவாய்பட்டி அருகே சென்ற போது நிலைதடுமாறிய இருசக்கரவாகனம் சாலையோர புளியமரத்தில் மோதியது இதில் தலையில் காயமடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விரலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி மேற்கொண்டு விசாரிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.