எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கடலில் எல்லை தாண்டினால் படகு முடக்கம், அபராதம்: காரைக்கால் மீனவர் கூட்டத்தில் தீர்மானம்

கடலில் எல்லை தாண்டினால் படகு முடக்கம், அபராதம் விதிக்கப்படுமென காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2015, 6:55 am

செல்வ முத்துகுமாரசாமி

கடலில் எல்லை தாண்டினால் படகு முடக்கம், அபராதம் விதிக்கப்படுமென காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் பிடித்து சிறையிலடைத்துள்ளனர். இவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம், காரைக்கால் மாவட்ட மீனவர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் :

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கவேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கெனவே பல மாதங்களாக இலங்கை துறைமுகத்தில் நிற்கும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 3 படகுகளை மீட்டுவர மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கை, தமிழக, புதுச்சேரி மீனவர்கள் பேச்சுவார்த்தை 2 கட்டங்களாக நடத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, தொடரும் மீனவர் பிரச்னையை தீர்வுக்கு கொண்டுவரவேண்டும்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கவேண்டும். எல்லை தாண்டியது தெரியவந்தால், அந்த படகுக்கு ஒரு மாதம் தொழில் மறியல் (முடக்கம்) செய்யப்படும். படகின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தீர்மானம் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமப் பஞ்சாயத்தார்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.