அம்பை அருகே பழிக்குப்பழியாக கட்டடத் தொழிலாளி கொலை
ஆழ்வார்குறிச்சி அருகே கீழஆம்பூர் துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி மகன் ராமச்சந்திரன் (38). கட்டடத் தொழிலாளியான இவர் இன்று மாலை அம்பாசமுத்திரம் அருகே


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வியாழக்கிழமை மாலை கட்டடத் தொழிலாளி பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டார்.
ஆழ்வார்குறிச்சி அருகே கீழஆம்பூர் துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி மகன் ராமச்சந்திரன் (38). கட்டடத் தொழிலாளியான இவர் இன்று மாலை அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தில் உறவினர் வீட்டு வந்தாராம். அப்போது, அங்கு சர்ச் தெருவில் வைத்து ராமச்சந்திரனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். பலத்த காயமடைந்த ராமச்சந்திரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சில மாதங்களுக்கு ஆழ்வார்குறிச்சியில் நிகழ்ந்த பெண் கொலையில் தொடர்புடைய இவர் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே சம்பவ இடத்தை திருநெல்வேலி எஸ்.பி. க.ச. நரேந்திரன்நாயர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...