புதிய அறிவிப்பின்படி தீபாவளி பண்டிகைக்கு ஊர்களுக்கு செல்லுவோர் ஜூலை மாதத்திலும் பொங்கலுக்கு ஊருக்கு செல்ல ஆகஸ்ட் மாதத்திலும் ரயிலுக்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
2015 - 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் நாள்கள் 60 இல் இருந்து 120 நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கணக்கீட்டின்படி, நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் 120 நாள்களுக்கு முன்பு அதாவது ஜூலை மாதம் 13 ஆம் தேதியே பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளிக்கு முன்கூட்டியே ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால், இன்னும் ஒரு சில நாட்கள் முன்னதாகவும் முன்பதிவு செய்யலாம்.
அதேபோல அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கு, ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியே ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யலாம்.
இதே போலத்தான், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கும் ஊருக்குச் செல்வோர், இப்போதே திட்டமிட்டு, சரியாக 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொண்டு நிம்மதியாக ஊருக்குச் செல்லலாம்.
120 நாட்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே இருந்த நடைமுறைதான் என்றாலும், தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைவரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


