திருச்சி மாநகராட்சியில் 2015- 16ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு கணக்கு இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கான அவசரக் கூட்டத்துக்கு மேயர் ஜெயா தலைமை தாங்கினார். வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவர் வி. ஐயப்பன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதில்,
2015-16ஆம் ஆண்டு மொத்த வரவு ரூ.310.38 கோடி எனவும், மொத்த செலவு ரூ.323.53 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பற்றாக்குறை ரூ.13.14 கோடியாகும்.
அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்கள்:
2015-16ல் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால்கள் ரூ.12.10 கோடியில் அமைக்கப்படும்.
திறந்தவெளியில் மனிதக் கழிவுகள் கலப்பதை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.86 கோடியில் 13 புதிய பொதுக் கழிப்பறைகள் கட்டப்படும்.
ரூ.1 கோடியே 11 லட்சத்தில் 49 கழிப்பிடங்கள் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.123 கோடியில் திருச்சி மாநகராட்சி மற்றும் மணப்பாறை, துவாக்குடி, துரையூர் நகராட்சிகளை இணைத்து மண்டல அளவிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்படும்.
தற்போதுள்ள அறியமங்கலம் குப்பைக் கிங்களில் ரூ.10 கோடியில் பசுமைக் குன்று அமைக்கப்படும்.. எனப் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ள.
எனினும், புதிய திட்டங்களோ, நவீன திட்டமோ எதுவுமில்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

