ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை: களக்காட்டில் அதிகபட்சம் 123.2 மி.மீ

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. களக்காட்டில் அதிகபட்சம் 123.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2015, 8:09 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. களக்காட்டில் அதிகபட்சம் 123.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கோடை காலம் தொடங்கும் முன்பாகவே திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை எட்டியிருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை பரவலாக தென்மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காட்டில் அதிகபட்சம் 123.2, ஆய்க்குடியில் 80.2, ஆலங்குளத்தில் 38.6, கன்னடியன் அணைக்கட்டில் 25, திருநெல்வேலி 9, பாளையங்கோட்டை 7, அம்பாசமுத்திரம் 14, சேரன்மகாதேவி 17, செங்கோட்டை 18.2, ராதாபுரம் 14.

பாபநாசம் அணையில் 68, சேர்வலாறு அணையில் 78, மணிமுத்தாறு அணையில் 33.2, கடனாநதி அணையில் 10, ராமநதி அணையில் 10, கருப்பாநதி அணையில் 2, குண்டாறு அணையில் 16, அடவிநயினார் அணையில் 5, நம்பியாறு அணையில் 5, கொடுமுடியாறு அணையில் 60.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 590.93 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 333 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 45 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணை 78.75 அடி, சேர்வலாறு அணை 91.07, மணிமுத்தாறு அணை 89.80 அடி, கடனாநதி அணை 27.40 அடி, ராமநதி அணை 25 அடி, கருப்பாநதி அணை 24.67 அடி, அடவிநயினார் அணை 29.50 அடி, வடக்குப் பச்சையாறு அணை 40 அடி, கொடுமுடியாறு அணை 2.50 அடியாகவும் இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததாலும், பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லாததால் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.