சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாலுக்கா அலுவலக சீர்கேட்டை கண்டித்தும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
மற்றும் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடத்தி பட்டய சான்றிதழ்
வழங்காததை கண்டித்தும், ஓமக்குளம் அருகே உள்ள குப்பை மேட்டினால்
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை பொருட்படுத்தாத அதிகாரிகளை கண்டித்தும்
இந்தகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் இளைஞரணி தலைவர் ராஜா.சம்பத்குமார் தலைமை வகித்தார். மூப்பனார்
பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா, ஆர்.சம்பந்தமூர்த்தி,
என்.இளங்கோவன், எம்.கே.பாலா, ஆட்டோ டி.குமார், ஜி.ஆறுமுகம் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். தினேஷ்குமார் வரவேற்று பேசினார். முன்னாள் நகரத்
தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆர்.ரமேஷ், பி.கார்த்திக், பாலச்சந்தர்,
முத்துசாமி, வல்லம்படுகை கணேசன், ஜி.கே.வாசன் நற்பணி மன்ற நிர்வாகிகள்
எஸ்.முத்துக்குமார், அப்பு செல்வக்குமார்,. செந்தில்குமார், மகளிரணி
ஆர்.சுப்புலட்சுமி, மீனாசெல்வம், முத்துமணி, கோ.ஜனகம், ராதா உள்ளிட்டோர்
பங்கேற்றனர். துரைமுருகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

