விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் சட்ட மசோதாவைக் கண்டித்து விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு முன்னிலை வகித்தார். இதில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேசுகையில், தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் தவறுகள் நடக்கிறது. அமைச்சர் ஒருவர் வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவரை தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு சிபிஐ விசாரணை கேட்டுள்ளனர். இதுபோன்ற பல்வேறு தவறுகள் நடந்து வருவதாகவும், அதை பொதுமக்கள் தட்டிக் கேட்பார்கள் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
பின்னர் தலைவரின் உத்தரவுப்படி விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் சட்ட மசோதாவை கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் மாநில அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குன்னூர் சீனிவாசன், எ.ஆர்.ஆர்.சீனிவாசன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாஅருண்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


