திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த ஏர்-ஏசியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தான் அணிந்திருந்த உடையிலிருந்து சப்தம் ஒலித்தது. இதையடுத்து அதிகாரிகள் நபரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டதில் அவரது பேண்ட் பாக்கெட்டில் 200 கிராம் தங்க கட்டி இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சமாகும்.
தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது இர்பான் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

