நெல்லை மாவட்டத்தில் பகலில் வெப்பம், இரவில் பனிப்பொழிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் இரவில் கடும் பனிப்பொழிவு, பகலில் 100 டிகிரி அளவில் வெப்பமும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருநெல்வேலி மாவட்டத்தில் இரவில் கடும் பனிப்பொழிவு, பகலில் 100 டிகிரி அளவில் வெப்பமும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவ மழை காலம் முடிந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதாவது டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு நிலவியது. பனிப்பொழிவால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் ஆரம்பத்தில் பகலில் கடும் வெப்பம் இருந்தது. 100 டிகிரியை எட்டிய வெப்பம் காரணமாக தர்பூசணி, இளநீர், குளிர்பானக் கடைகளை தேடி மக்கள் சென்றனர். ஒரு சில தினங்கள் பெய்த திடீர் மழையால் வெப்பம் குறைந்து காணப்பட்டது.
மீண்டும் பகலில் வெப்பம் நிலவி வரும் சூழலில் கடந்த 2 தினங்களாக இரவில் கடும் பனிப்பொழிவு உள்ளது. திறந்த வெளியில் நிறுத்தப்படும் வாகனங்களின் இருக்கைகள் பனிப்பொழிவால் நனைந்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை பனிப்பொழிவின் தாக்கம் இருந்ததாக நடைபயிற்சி சென்றவர்கள் தெரிவித்தனர்.
மாஞ்சோலை, நாலுமுக்கு, கோதையாறு உள்ளிட்ட தேயிலைத் தோட்டப்பகுதியில் கடும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
வழக்கமாக தில்லி போன்ற வட மாநிலங்களில் பனிப்பொழிவு இருக்கும். தமிழகத்தில் மலைப்பிரதேசங்களான ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் போன்ற இடங்களில் பனிப்பொழிவு காணப்படுவது இயல்பு. பருவ மழை முடிந்து ஒரு சில மாதங்கள் நீடிக்கும் பனிப்பொழிவு பின்னர் குறைந்து காணப்படும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பருவம் தவறி பெய்து வருகிறது. இதேபோல் கோடை காலத்தில் பனிப்பொழிவும் காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...