நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி அறுவடை முடிகிறது: மணிமுத்தாறு அணை மூடல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி அறுவடை முடியும் நிலையில் இருப்பதால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை மணிமுத்தாறு அணை மூடப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி அறுவடை முடியும் நிலையில் இருப்பதால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை மணிமுத்தாறு அணை மூடப்பட்டது.
வடகிழக்குப் பருவ மழை 2014 இல் வழக்கத்தை விட கூடுதலாக பெய்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ சாகுபடி முழுஅளவில் மேற்கொள்ளப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் 68,640 ஹெக்டேரில் நெல்லும்,7,200 ஹெக்டேரில் வாழைப் பயிரும் சாகுபடி செய்யப்பட்டது.இம்மாவட்டத்தில் பாபநாசம் அணையின் மூலம் பாசனம் பெறும் 7 கால்வாய்கள், மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான கால்வாய் மூலம் பாசனம் நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பிசான பருவ அறுவடை 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் தேவை இல்லை. ஆகவே பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனத்தில் 2 வாரங்களுக்கு முன் தண்ணீர் நிறுத்தப்பட்டது.அணையில் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டதை அடுத்து அணை மூடப்பட்டது.இம்மாவட்டத்தில் வடக்குப் பச்சையாறு அணையில் இருந்து 90 கனஅடியும், நம்பியாறு அணையில் இருந்து 30 கனஅடியும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பிற அணைகள் மூடப்பட்டன.
நீர்வரத்து இல்லை: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு 15 கனஅடியும், கடனாநதி, ராமநதி அணைகளுக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கோடை தொடங்கி விட்டதால் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.ஆகவே அணைகளின் தற்போதைய நீர் இருப்பை கொண்டு இவ்விரு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 78.60 அடி, சேர்வலாறு அணை
நீர்மட்டம் 90.88 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 87.44 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 25.80 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 27.89 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 12.13 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 20.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 38.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13.45 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...