சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை மற்றும் சீதாகல்யாணம் நிகழ்ச்சி சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மார்ச் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 28-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீகோதண்டராமர் தேரில் எழுந்தருளிய பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேலவீதி ஸ்ரீகோதண்டராமர் கோயில் வளாகத்திலிருந்து தேர் புறப்பட்டு, நான்குவீதிகள் வலம் வந்தது. தேரினை திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் திருமஞ்சனம், சீதா கல்யாணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மார்ச் 29-ம் தேதி காலை புஷ்பயாகம், மாலை ஸ்ரீஆஞ்சநேயர் உத்சவம், பட்டாபிஷேகம், இரவு புஷ்ப பல்லக்கு, 31-ம் தேதி விடையாத்தி திருமஞ்சனத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் டி.திருவேங்கடவன், வி.எஸ்.கிருஷ்ணமாச்சாரி, ஜே.சுதர்சனன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

