கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: புதிய தமிழகம் கட்சியினர் 31 பேர் கைது

திருநெல்வேலியில் தடையை மீறி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :30 மார்ச் 2015, 9:23 am

முத்துகுமார்

திருநெல்வேலியில் தடையை மீறி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொம்பன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை.

இந்த நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச்செயலர் நடராஜன் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 31 பேரை கைது  செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.