ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி உதவித் தொகை: ஆட்சியரிடம் புகார்

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயின்று பார்வையில்லாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என

News image
Updated On :30 மார்ச் 2015, 9:01 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயின்று பார்வையில்லாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை பார்வையிட்டோர் பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் ராணி அண்ணா மகளிர் கல்லூரி, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்பு பயின்று பார்வையில்லாத மாற்றுத் திறனாளி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக கல்வி உதவித் தொகை, வாசிப்போர் உதவித் தொகை ஆகியன முறையாக வழங்கப்படவில்லை. மேலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படவில்லை. இதனால் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பார்வையில்லாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.