எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எல்லை தாண்டுவோரை சுடும் பாவச் செயலை இலங்கை செய்யாது - இலங்கை அமைச்சர்

கடலில் எல்லை தாண்டிவரும் மீனவர்களை துப்பாக்கியால் சுடும் பாவச் செயலை இலங்கை அரசு செய்யாது, எனினும் சுடுவதற்கான சட்டம் இருப்பதையும் நினைவில்

News image
Updated On :1 மே 2015, 7:39 am

செல்வ முத்துகுமாரசாமி

கடலில் எல்லை தாண்டிவரும் மீனவர்களை துப்பாக்கியால் சுடும் பாவச் செயலை இலங்கை அரசு செய்யாது, எனினும் சுடுவதற்கான சட்டம் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் இலங்கை அரசின் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு இலங்கை இந்து சமய, மறுவாழ்வுத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.

மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரணாம்பிகை மற்றும் தனி சன்னதிகொண்டிருக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது :

இந்திய மற்றும் இலங்கை அரசுகளிடம் எல்லை தாண்டுவோர் தண்டிக்கும் சட்டங்கள் உள்ளன. எல்லை தாண்டி வருவோரை சுடுவோம் என நானோ எங்களது அரசோ கூறவில்லை. அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அந்தந்த நாட்டின் எல்லையை காப்பது அந்தந்த நாடடின் கடமையாகும். இதை செய்யும்போது அந்நியர் எல்லைக்குள் நுழைந்தால் சுடுவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் உள்ளது. இதைத்தான் கூறுகிறோமே தவிர, இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வந்தால் சுடுவோம் என கூறவில்லை. அந்த பாவச் செயலை இலங்கை அரசு செய்யாது.

எல்லை தாண்டுவோரை தண்டிக்க இருக்கும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்போம். இருக்கும் தண்டனையை குறைக்கவோ, மாற்றவோ முடியாது. இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளது. நாங்கள் ஜனநாயக ரீதியில் செயலாற்ற விரும்புகிறோம். இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழவேண்டுமென்பதே எங்கள் அரசின் கொள்கை.

இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து இந்திய பிரதமர் நரேந்திரமோடியும், இலங்கை அதிபர், பிரதமரும் பேசிவருகின்றனர். இரு அரசுகளும் இணைந்து பிரச்னைக்கு தீர்வு காணும். குறிப்பாக இந்திய பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்றார் இலங்கை அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.